For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அராபியர்கள் என்றால் ஷேக்கும், பெல்லி டான்ஸும்தானா?... அமெரிக்காவில் ஒரு 'வி்ஸ்வரூபம்'!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வெளியாகியுள்ள கோக் விளம்பரப் படம் அங்குள்ள அரபு அமெரிக்கர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

கோகோ கோலா சூப்பர் பவுல் விளம்பரம்தான் தற்போது அங்கு பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளது. எப்படி தமிழகத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களின் அதிருப்தியை வாரிக் கட்டிக் கொண்டுள்ளதோ அதேபோல அரபு அமெரிக்கர்கள், இந்த கோக் விளம்பரத்திற்கு எதிராக வரிந்து கட்டிக் கிளம்பியுள்ளனர்.

எப்பப் பார்த்தாலும் அராபியர்களை இழிவுபடுத்துவது போலவே காட்டுகிறார்களே இந்த அமெரிக்கர்கள் என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அந்த சர்ச்சை குறித்துப் பார்ப்போம்

ஒட்டகத்தில் ஒரு அராபியர்

ஒட்டகத்தில் ஒரு அராபியர்

ஒரு பாலைவனம். ஒட்டகத்தில் ஒரு அராபியர் போய்க் கொண்டிருக்கிறார். அப்போது தூரத்தில் சில கெளபாய்களை அவர் பார்க்கிறார். மேலும் லாஸ் வேகாஸிலிருந்து வரும் பெல்லி டான்ஸ் ஆடும் பெண்களையும் பார்க்கிறார். அப்போது பாலைவனத்தில் ஒரு கோக் பாட்டில் இருக்கிறது. அதைப் பார்த்த அத்தனை பேரும் அதை எடுக்க ஓடுகின்றனர். இதுதான் அந்த விளம்பரம்.

டிவியில் வரப் போகிறது

டிவியில் வரப் போகிறது

இந்த விளம்பரம் குறித்த டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இது சிபிஎஸ் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த விளம்பரத்திற்கு எதிராகத்தான் தற்போது அரபு அமெரிக்கர்கள் கிளம்பியுள்ளனர்.

அராபியர்கள் என்றால் ஷேக்குகள்தானா...

அராபியர்கள் என்றால் ஷேக்குகள்தானா...

இதுகுறித்து அமெரிக்க அரபு துவேஷ எதிர்ப்புக் கமிட்டியின் தலைவரான வாரன் டேவிட் கூறுகையில், அராபியர்கள் என்றாலே ஷேக்குகள் மட்டும்தானா... இல்லை தீவிரவாதிகள்தானா அல்லது பெல்லி டான்ஸர்கள்தானா.. ஏன் இந்த இனவெறிப் பார்வை.. என்று கோபத்துடன் கேட்டார்.

விளம்பரத்தில் போட்டி வேறு

விளம்பரத்தில் போட்டி வேறு

இந்த விளம்பரத்தில் போட்டி வேறு வைத்துள்ளனர். அதாவது கோக் பாட்டிலை எடுக்க ஓடுவோரில் யார் வெல்வார்கள் என்பதுதான் போட்டி. ஆனால் அதில் ஒட்டகத்துடன் வரும் அராபியரை போட்டியில் சேர்க்கவில்லையாம். இதுவும் ஒரு பாரபட்சமான செயல் என்று விமர்சனம் கிளம்பியுள்ளது.

இனவெறி விளம்பரம்

இனவெறி விளம்பரம்

இதுகுறித்து இமாம் அலி சித்திக் என்பவர் கூறுகையில், கோக் விளம்பரம் இனவெறியுடன் கூடியது. அராபியர்களை முட்டாள்களாகவும், ஒட்டகம் ஓட்ட மட்டுமே தெரியும் என்பது போலவும், பின்தங்கியவர்கள் என்றும் இதில் காட்டியுள்ளனர். அவர்களுக்கு வெற்றி பெறத் தெரியாது என்பது போலவும் காட்டியுள்ளனர் என்றார் கோபமாக.

இதில் என்ன செய்தி இருக்கிறது?

இதில் என்ன செய்தி இருக்கிறது?

அபேத் அயூப் என்பவர் கூறுகையில், இதில் என்ன செய்தி இருக்கிறது என்று தெரியவில்லை. அராபியரை போட்டியில் சேர்க்காததன் மூலம் அராபியர்களுக்கு உலகத் தரம் கிடையாது, போட்டிகளில் பங்கேற்கும் தகுதி கிடையாது என்பது போல காட்டியுள்ளனர். இது அவதூறானதாகும் என்றார்.

இதைப் போய் ஏன் பெரிதாக்குகிறார்கள்.. கோக் விளக்கம்

இதைப் போய் ஏன் பெரிதாக்குகிறார்கள்.. கோக் விளக்கம்

இந்த சர்ச்சை குறித்து கோக் நிறுவன செய்தித்தொடர்பாளர் லாரன் தாம்ப்சன் கூறுகையில், இது ஒரு சினிமாத்துவமான விளம்பரமே. இதில் யாரையும் கிண்டலடிக்கவில்லை. அனைத்துத் தரப்பினரும் கோக் குடிக்கிறார்கள் என்பதால் அனைத்து இனப் பிரிவினரையும் இதில் காட்ட முற்பட்டுள்ளோம். இதை தவறாக பார்க்க வேண்டாம் என்றார்.

விஸ்வரூபம் எடுக்குமா?

விஸ்வரூபம் எடுக்குமா?

ஏற்கனவே தமிழகத்தில் விஸ்வரூபம் படம் பெரும் பிரச்சினையைக் கிளப்பி தற்போதுதான் அமைதியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அராபியர்களை அமெரிக்காவில் சீண்டிப் பார்த்துள்ளனர்.

English summary
Arab-American groups have sharply criticized a Coca-Cola Super Bowl ad depicting an Arab walking through the desert with a camel, and one group said it would ask the beverage giant to change it before CBS airs the game on Sunday before an expected audience of more than 100 million U.S. viewers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X