For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ட்விட்டர் மீது ஹேக்கர்ஸ் அட்டாக்! 2.5 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு!

By Mathi
Google Oneindia Tamil News

Twitter
சான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டருக்கு நேற்று பெரும் அதிர்ச்சியான நாளாக இருந்தது! ஹேக்கர்ஸ் கும்பல் ட்விட்டர் தளத்துக்குள் ஊடுருவி சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பற்றிய தகவல்களை திருடிச் சென்று அதிர வைத்திருக்கிறது.

ட்விட்டர் சமூக வலைதளம் அவ்வப்போது ஹேக்கர்ஸின் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. கடந்த வாரம்கூட இப்படி ஹேக்கர்ஸ் கும்பல் தாக்குதல் நடத்த முனைந்தது கண்டுபிடிக்கப்பட்டு தற்காலிக தளம் மூடப்பட்டது. ஆனாலும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் பற்றிய தகவல்களை ஹேக்கர்ஸ் கும்பல் திருடிக் கொண்டு போயிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து 'களவு' கொடுத்த பயனாளர்கள் அனைவரும் புதிய கணக்கு தொடங்கிக் கொள்ளுமாறு ட்விட்டர் தளம் அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் ஊடகம் மற்றும் தொழில்நுட்பத் துறை மீதான பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இதனிடையே அமெரிக்க கணிணிகளை ஊடுருவி தகவல்களைத் திருடுவதில் சீனர்கள்தான் அதிகம் ஈடுபடுவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருப்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
Twitter said Friday that hackers, in the latest online attack, may have gained access to information on a quarter of a million of its more than 200 million active users
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X