For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க இறைச்சிக்கு ரஷியா தடை விதித்தது!

By Mathi
Google Oneindia Tamil News

மாஸ்கோ: அமெரிக்கா- ரஷியா இடையே உறவில் மற்றொரு விரிசலாக அமெரிக்காவின் இறைச்சிக்கு ரஷியா திடீர் தடை விதித்திருக்கிறது.

ரஷியாவில் அமெரிக்கர்கள் குழந்தைகளைத் தத்து எடுக்க ஏற்கெனவே ரஷியா அதிரடியாக தடை விதித்து. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இறைச்சிக்கு தடை விதித்திருக்கிறது.

ரஷியாவின் தேவையில் 7.5 விழுக்காடு மாட்டு இறைச்சியும் 11 விழுக்காடு பன்றி இறைச்சியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதிக்கு வரும் 11-ந் தேதி முதல் தடை விதிப்பதாக ரஷியா அறிவித்திருக்கிறது.

ரஷியாவின் தடை மூலமாக ஓராண்டில் 500 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் என்று அமெரிக்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் இறைச்சிக்கு சீனா மற்றும் ஐரோப்பா ஏற்கெனவே தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amidst a broader chill in Russian-US relations over alleged rights abuses by Moscow officials and a Russian ban on US adoptions, Russia said it would stop importing all US meat and pork products on February 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X