For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டிய ஏர்ஹோஸ்டஸ் .. ரஷ்யாவில் களேபரம்!

Google Oneindia Tamil News

Air Hostess
மாஸ்கோ: ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம் வெளியான காரணத்தால்.

அந்தப் பெண்ணின் பெயர் தாத்யானா கொஸ்லென்கோ. இவர் ரஷ்ய அரசு நிறுவனமான ஏரோபிளாட் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.

இவர் தனது விமானத்தில் பணியில் இருந்தபோது பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டுவது போன்ற ஒரு படத்தை ரஷ்ய சமூக வலைத்தளமான கோன்டேக்டேவில் (பேஸ்புக் போன்றது) போட்டிருந்தார். இது காட்டுத் தீ போல பரவி விட்டது. பலர் இதை எடுத்து ட்விட்டரில் போட அவ்வளவுதான், எங்கு பார்த்தாலும் இந்தப் படம்தான்.

இதனால் ரஷ்யாவில் பெரும் சர்ச்சையாகி விட்டது. பயணிகளை தாத்யானா அவமதித்து விட்டார் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து தாத்யானவை விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அதேசமயம், அந்த விரலைக் காட்டும் பெண் நான் அல்ல என்று மறுத்துள்ளார் தாத்யானா. இருப்பினும் இதுதொடர்பான விசாரணையின்போது, அது தான்தான் என்றும், அதேசமயம் வேடிக்கையாகத்தான் இப்படிச் செய்ததாகவும் கூறியுள்ளாராம் தாத்யானா..

நல்லவேளையாக, பயணிகளின் பின்புறமாக இருந்தபடி நடுவிரலைக்காட்டினார் தாத்யானா. பயணிகளுக்கு முன்பா காட்டியிருந்தால் என்ன நட்திருக்குமோ...

வேடிக்கைக்காக இப்படியாம்மா செய்வது...??

English summary
An air hostess who posted a picture of herself giving her passengers the finger has been sacked by Aeroflot airline bosses in Russia after it ended up on Twitter. Flight attendant Tatiana Kozlenko put the snap up on her personal page on Vkontakte, one of Russia's most popular Facebook-style social networks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X