For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கற்பழிப்பில் நம்பர் ஒன் நகரம் டெல்லி: சென்னைக்கு 4வது இடம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தலைநகர் டெல்லியில் தான் அதிக கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமும் செய்தித்தாளை பிரித்தால் அங்கு கற்பழிப்பு, இங்கு கற்பழிப்பு என்று ஒரே கற்பழிப்பு செய்திகளாக உள்ளன. இந்த நிலை ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர் கதையாகிவிட்டது. டெல்லியில் பிசியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்ட பிறகு தான் பல கற்பழிப்பு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய நகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்குகளின் விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

முதலிடத்தில் டெல்லி

முதலிடத்தில் டெல்லி

தலைநகரான டெல்லியில் 2009ல் 404 கற்பழிப்பு வழக்குகளும், 2010ல் 414 வழக்குகளும் மற்றும் 2011ல் 453 வழக்குகளும் பதிவாகியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் போகிறது.

2வது இடத்தில் மும்பை

2வது இடத்தில் மும்பை

மும்பையில் கடந்த 2009ம் ஆண்டில் 182 கற்பழிப்பு வழக்குகளும், 2010ல் 194ம் மற்றும் 2011ல் 221 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பெங்களூருக்கு 3வது இடம்

பெங்களூருக்கு 3வது இடம்

ஐடி நகரமான பெங்களூரில் பதிவான கற்பழிப்பு வழக்குகள் விவரம், 2009-65, 2010-65, 2011- 97 வழக்குகள்.

4வது இடத்தில் சிங்கார சென்னை

4வது இடத்தில் சிங்கார சென்னை

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 2009ல் 39 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 20010ல் 47கவும், 2011ல் 76கவும் அதிகரித்துள்ளது.

5வது இடத்தில் ஹைதராபாத்

5வது இடத்தில் ஹைதராபாத்

ஹைதராபாத்தில் 2009ல் 47 கற்பழிப்பு வழக்குகள் பதிவானது. இந்த எண்ணிக்கை 2010ல் 45க குறைந்து 2011ல் 59க அதிகரித்துள்ளது.

6வது இடத்தில் கொல்கத்தா

6வது இடத்தில் கொல்கத்தா

கொல்கத்தாவில் 2009ல் 42 கற்பழிப்பு வழக்குகள் பதிவான நிலையில் மறு ஆண்டு 32க அந்த எண்ணிக்கை குறைந்தது. பரவாயில்லையே வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதே என்று நினைக்கையில் 2011ல் 46 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின.

English summary
According to the reports of ministry of home affairs, Delhi topped the list of rape cases reported under IPC. Chennai is in the 4th place. This reports tells the number of rape cases registered from 2009 till 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X