For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 வீரப்பன் கூட்டாளிகளும் 14 நாட்களில் தூக்கிலிடப்படுவர் -கர்நாடக சிறைத்துறை டிஜிபி

Google Oneindia Tamil News

4 Veerappan aides to be hanged at Belgaum
பெல்காம்: குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்துள்ளதைத் தொடர்ந்து பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு வீரப்பன் கூட்டாளிகளும் இன்னும் 14 நாட்களில் தூக்கிலிடப்படுவர் என்று கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி ககந்தீப் கூறியுள்ளார்.

வீரப்பன் கூட்டாளிகளான மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன் மற்றும் ஞானபிரகாசம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதையடுத்து அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர்.

இத்தகவலை உறுதிசெய்த கர்நாடகா சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி ககந்தீப் கூறுகையில், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்னும் 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும். 14 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற, தூக்கிற்கான தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயிப்பார் என்று தெரிவித்தார்.

பெல்காம் சிறையில்

4 பேரும் பெல்காம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். அங்கேயே இவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிகிறது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு பெல்காம் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

English summary
After a gap of 21 years, Belgaum will witness the hanging of convicts at the Central Jail. Isolated cells in the Central Jail at Hindalga are being readied for housing the four associates of forest brigand Veerappan who have been sentenced to death by the Supreme Court. Saiman, Gnanprakash, Madaiah and Bilvindra, accused of killing 21 policemen and others, will be hanged on April 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X