For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த வேலை பார்க்கிறவங்க நிறைய காதல் பண்றாங்களாம்!

Google Oneindia Tamil News

காதலில் விழுவதற்கு எது காரணி... இதுதான், இதுவேதான் என்று யாருமே எதையுமே சொல்ல முடியாது. காரணம், காதல் எப்போது வரும், எப்படி வரும் என்பதை யாருமே கணிக்க முடியாது என்பதால். ஆனால் சில குறிப்பிட்ட வேலைகளில் ஈடுபடும்போது சம்பந்தப்பட்டவர்கள் காதலில் விழ அதிக வாய்ப்புகள் உள்ளதாம். அதுகுறித்து ஒரு சர்வே நடத்தி லிஸ்ட்டைப் போட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவோருக்கு இடையே ரொமான்ஸ் நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். எனவே இதுபோன்ற வேலையில் ஈடுபடுவோரை காதல் அம்புகள் எளிதில் தாக்குகின்றனவாம்...

அதற்காக மற்ற வேலைகளில் ஈடுபடுவோருக்கிடையே காதல் வராதா என்று கேட்கலாம். அப்படியெல்லாம் கிடையாது, அங்கும் காதல் வரும். ஆனால் இந்த வேலைகளில் அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம்.

அது என்ன என்று ஒரு பார்வை பார்ப்போமா

உணவு தொடர்பான வேலைகள்

உணவு தொடர்பான வேலைகள்

கேட்டரிங் உள்ளிட்ட உணவு தொடர்பான வேலைகளில் ஈடுபடுவோருக்கிடையே காதல் மலர்வதற்கு 24.7 சதவீத வாய்ப்புகள் இருப்பாக சர்வே கூறுகிறது.

சமையல்காரர்கள்

சமையல்காரர்கள்

சமையல் வேலைகளில் ஈடுபடுவோர் அதாவது குக்காக இருப்போருக்கிடையே காதல் மலருவதற்கு 17.6 சதவீத வாய்ப்புகள் உள்ளனவாம்.

டெஸ்பாட்ச் வேலை செய்வோர்

டெஸ்பாட்ச் வேலை செய்வோர்

டெஸ்பாட்ச் போன்ற வேலையில் ஈடுபடுவோருக்கிடையே காதல் மலருவதற்கு 17.1 சதவீத வாய்ப்புகள் உள்ளனவாம். இவர்களுக்கிடையான காதல் கல்யாணம் வரை போகக் கூடுமாம்.

விளம்பர தொழில்

விளம்பர தொழில்

விளம்பரம் மற்றும் அதுதொடர்பான தொழிலில் ஈடுபடுவோருக்கிடையேயும் காதல் மலர அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். அதாவது 14.1 சதவீத வாய்ப்புகள் இருக்கிறதாம்.

இன்சூரன்ஸ் கிளெய்ம்...

இன்சூரன்ஸ் கிளெய்ம்...

இன்சூரன்ஸ், மருத்துவமனைகள் போன்றவற்றில் கிளெய்ம் சேவைகளைக் கவனிக்கும் பிரிவில் பணியாற்றுவோருக்கிடையேயும் காதல் மலர அதிக வாய்ப்புகள் உள்ளதாம். அதாவது 13.2 சதவீத வாய்ப்பு உள்ளதாம்.

டாக்டர்கள்

டாக்டர்கள்

மருத்துவத் தொழிலில் ஈடுபடுவோரும் அதிக அளவில் காதலில் வீழ்கிறார்களாம். அதாவது 13 சதவீத அளவுக்கு.

நடிகர்கள் - இயக்குநர்கள்

நடிகர்கள் - இயக்குநர்கள்

இவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் காதலித்துதான் மணக்கிறார்கள். இத்துறையினர் மத்தியில் காதல் மலருவதற்கு 12.9 சதவீத வாய்ப்பு இருப்பதாக சர்வே கூறுகிறது.

மனித வள வேலைகள்

மனித வள வேலைகள்

எச்.ஆர். போன்ற மனிதவள வேலைகளில் ஈடுபட்டிருப்போர் மத்தியில் காதல் மலருவதற்கு 12.4 சதவீத வாய்ப்புகள் உள்ளதாம்.

மெக்கானிக்கல் என்ஜீனியர்கள்

மெக்கானிக்கல் என்ஜீனியர்கள்

மெக்கானிக்கல் என்ஜீனியர்கள் மத்தியிலும் காதல் அலை வீசுகிறதாம். அதாவது 12.2 சதவீத வாய்ப்புகளாம்.

கம்ப்யூட்டர் வேலை

கம்ப்யூட்டர் வேலை

இந்த செய்தியை அடிப்பதே கம்ப்யூட்டரில்தான். இப்படிப்பட்ட நிலையில், இதுபோன்ற வேலையில் இருப்போருக்கும் காதல் வராமலா போகும்.. அவர்களுக்கும் காதல் நன்றாகவே மலருகிறதாம்.. குறிப்பாக சிஸ்டம் மேனேஜர் மற்றும் ஐடி துறையில் ஈடுபட்டிருப்போருக்கிடையே நிறையவே காதல் உருவாகிறதாம்...

நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க...வாய்ப்பு கிடைச்சா பழகிப் பாருங்களேன்...!

English summary
Certain jobs are more likely to lead to lasting romance, according to a recent survey by career site PayScale. The poll found that of 42,000 employees surveyed, only 6 percent married a co-worker, even though 15 percent would be open to a lasting relationship with a colleague.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X