For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெக்சிகோவில் பிறந்த உலகின் அகோரமான பெண் இறந்து 150 ஆண்டுகளுக்கு பின் அடக்கம்

By Siva
Google Oneindia Tamil News

World's "ugliest woman" buried in Mexico 150 years after her death
மெக்சிகோ: 150 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த உலகின் அகோரமான பெண்ணின் உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான வடக்கு மெக்சிகோவில் அடக்கம் செய்யப்பட்டது.

1834ம் ஆண்டு மெக்சிகோவில் பிறந்தவர் ஜூலியா பாஸ்ட்ரானா. ஹைபர்ட்ரைகோசிஸ் மற்றும் ஜின்ஜிவல் ஹைபர்பிளாசியா ஆகிய குறைபாடுகளால் அவதிப்பட்ட அவருக்கு முகம் முழுக்க அடர்த்தியான முடி, தடித்த நாடி இருந்தது. இதனால் அவரை மக்கள் குரங்கு பெண் என்றும், கரடி பெண் என்றும் அழைத்தனர்.

இந்நிலையில் தியோடர் லென்ட் என்பவர் ஜூலியாவை தான் நடத்தும் சர்க்கஸில் சேர்த்து ஆடிப், பாட வைத்தார். அவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்று சர்க்கஸ் நடத்தினார். பின்னர் அவரே ஜூலியாவை மணந்தார். 1860ம் ஆண்டு ஜூலியா மாஸ்கோவில் ஒரு ஆண் குழந்தையை பெற்றுவிட்டு இறந்தார். அவரது மகனுக்கும் அவரைப் போன்ற குறைபாடு இறந்தது. அந்த குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்தது. அதன் பிறகு தியோடர் தனது மனைவி மற்றும் மகனின் உடல்களை பதப்படுத்தி அவற்றை தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்றார்.

இப்படி அவர்களின் உடல்கள் பல கைகள் மாறி இறுதியாக நார்வேயில் உள்ள ஆஸ்லோ பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் ஜூலியாவின் உடல் அவரது சொந்த ஊரான சினாலோ டீ லீவாவில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

English summary
World's ugliest woman, who died 154 years ago, was buried at her native place in Mexico on tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X