For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 செயற்கை கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி – சி-20 ராக்கெட்: பிப்.25ல் ஏவ முடிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 25-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி-20 ராக்கெட் மூலம் 7 செயற்கை கோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த செயற்கை கோள்களில் இரண்டு செயற்கை கோள்கள் கனடா நாட்டிற்கும் இரண்டு ஆஸ்திரியா நாட்டிற்கும் சொந்தமானவை. ஒரு செயற்கை கோள் இங்கிலாந்து நாட்டிற்கும் ஒன்று டென்மார்க் நாட்டிற்கும் சொந்தமானவை. இவற்றோடு இந்தியா-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள 'சரள்' செயற்கை கோளும் விண்ணில் பாய்கிறது.

7 செயற்கை கோள்கைகளும் சுமார் 700 கிலோ எடை கொண்டது. இவற்றை சுமந்து கொண்டு வரும் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி-20 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.

59 மணிநேர கவுண்டன்

சூரிய வட்டப்பாதையில் பூமியில் இருந்து சுமார் 785 கி.மீட்டர் உயரத்தில் இந்த 7 செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. இதற்காக வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை 59 மணிநேர 'கவுண்ட் டவுன்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

English summary
The Indian space agency will February 25 put into orbit seven foreign satellites including an Indo-French collaborative satellite SARAL and thus earn much wanted revenue. "The launch of the Polar Satellite Launch Vehicle-C20 (PSLV-C20) is currently fixed for February 25 evening," sources in the Indian Space Research Organisation (ISRO) said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X