For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாக வளரவேண்டும்: கும்பமேளாவில் வேண்டிய மீராகுமார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அலகாபாத்: பீஷ்மாஷ்டமியை முன்னிட்டு இன்று அலகாபாத் நகரின் திரிவேணி சங்கமத்தில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மீராகுமார் புனித நீராடினார். அப்போது ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாக வளரவேண்டும் என்று வேண்டிக்கொண்டதாக கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கியது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

Meira Kumar
பீஷ்மாஷ்டமி தினமான இன்று ஏராளமானோர் நீராடினர். புனித நீராட மிகமுக்கியமான தினமாக கருதப்படுவதால் இன்று மக்களவை சபாநாயகர் மீரா குமார் பங்கேற்று புனித நீராடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீரா குமார், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டின் ஜனநாயகம் சிறக்க பிரார்த்தனை செய்தேன். மேலும் ஜனநாயகத்தின் வேர்கள் மிக ஆழமாக வளர வேண்டும் என்றும் வேண்டினேன். பண்டைய கலாச்சாரத்தில் தனிச்சிறப்பு மிக்க இடம் பிடித்துள்ள கங்கை நதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றார்.

English summary
Lok Sabha Speaker Meira Kumar on Monday took a holy dip at Sangam while attending the Maha Kumbh mela here and said she had offered prayers for "roots" of democracy in the country to grow "deeper and deeper".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X