For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரியில் தேன் சீசன் துவக்கம்: 2 மாதத்தில் உச்சம்

Google Oneindia Tamil News

Honey
குமரி: குமரி மாவட்டத்தில் தேன் சேகரிக்கும் சீசன் துவங்கியுள்ளது.

குமரி மாவட்டத்தில் ரப்பர் இலை துளிர் விடும்போது அதில் உற்பத்தியாகும் தேனை சேகரிக்க தேன் கூடுகள் வைக்கப்படுவது வழக்கம்.

குமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் மரங்கள் தற்போது துளிர் விடத் தொடங்கியுள்ளது. இதனால் தேன் உற்பத்தியாளர்கள் ரப்பர் மரங்களில் தேன் கூடுகளை வைக்கத் துவங்கியுள்ளனர். இங்கு 10,000க்கும் மேற்பட்டோர் தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கால கட்டத்தில் கேரள மாநிலத்திலும் ரப்பர் தேன் உற்பத்தி துவங்குவது வழக்கம். இன்னும் 2 மாதங்களில் குமரி மாவட்டத்தில் தேன் சீசன் உச்சகட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1 லட்சம் கிலோ வரை தேன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

English summary
Honey producers in Kanyakumari district are happy as the time has come for them to collect honey from the rubber trees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X