For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்ட்வேர் என்ஜினியர்களே, 5 வருடத்தில் உங்கள் ஊதியம் குறையலாம்!

By Chakra
Google Oneindia Tamil News

IT margins headed inexorably downwards, may fall below 20%
பெங்களூர்: இந்தியத் தொழில்துறைகளிலேயே மிக அதிகமான மார்ஜின் வைத்து லாபம் அடைந்து வரும் துறை சாப்ட்வேர் துறை தான். குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு லாபம் வைத்துத் தான் சாப்ட்வேர்கள் விற்கப்படுகின்றன.

ஆனால், இந்த நிலைமை மிக விரைவிலேயே மாறப் போகிறது என்று எச்சரிக்கின்றனர் சாப்ட்வேர்-பொருளாதாரத் துறை நிபுணர்கள்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த லாபம் அளவு 20 சதவீதமாக சரியும் என்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இது மேலும் சரிந்து 11% முதல் 15% என்ற நிலைக்குப் போய்விடும் என்கிறார்கள்.

உலகளவில் ஐபிம். அக்சென்ஜர் உள்ளிட்ட பெரும் சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் அளவு 15 சதவீதத்துக்குள் தான் உள்ளது. ஆனால், இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் உள்ளிட்ட இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாப அளவு தான் 25 சதவீதமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவுட்சோர்சிங் ஆய்வு மையமான ஐஎஸ்ஜி இன்பர்மேசன் சர்வீஸஸ் அமைப்பின் ஆசியா-பசிபிக் பிரிவின் தலைவர் சித் பை கூறுகையில், இந்திய நிறுவனங்களிடையே ஏற்பட்டு வரும் கடும் போட்டியும், க்ளையன்டுகள் தங்களது நாடுகளிலேயே ஊழியர்களை நியமிக்கக் கோருவதும் அதிகரித்து வருகிறது. மேலும் பொருளாதார மந்தம் காரணமாக சாப்ட்வேர்களுக்கான, சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைக்குமாறும் பல முன்னணி நிறுவனங்களும் நெருக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கட்டணத்தை, லாபத்தை குறைப்பதைத் தவிர இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்கிறார்.

மேலும் க்ளவுட், டேட்டா அனலிட்டிக்ஸ், மொபிலிட்டி சொல்யூசன்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளை வழங்க பல புதிய நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களைப் பிடிக்க வேண்டிய நிலைக்கு முன்னணி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. கட்டணத்தைக் குறைத்து, லாபத்தையும் குறைத்தால் மட்டுமே இந்த வாடிக்கையாளர்களை பிடிக்க முடியும்.

வருமானம் குறையும்போது ஊதியங்களும் குறைய வாய்ப்புண்டு என்பதும் கவலைக்குரிய உண்மை.

English summary
The slight improvement in profitability at Indian software services firms in the December quarter is only a flash in the pan, and margins are headed inexorably downwards, analysts said. For more than a decade, software firms enjoyed one of the highest profitability levels for any industry, but a confluence of forces is pushing margins to levels seen for businesses dealing in commoditised goods. Within the next two years, experts predict that operating margins will fall to below 20% and settle at a level that just about takes it past single digits. For comparison, in the quarter to September, the average operating profit margin for corporate India was 14.5%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X