For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்சல்குருவுக்கு அதரவான கருத்து: 55 ஃபேஸ்புக் பக்கங்களை முடக்கியது மத்திய அரசு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Afzal Guru
டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகி தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல்குருவுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்ட 55 ஃபேஸ்புக் பக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல்குருவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனையொட்டி ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் அப்சல்குருவின் தூக்கினை விமர்சித்து தகவல்கள் வெளியாகி இருந்தன. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த 55 பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அப்சல்குருவின் தூக்கு தண்டனை குறித்து இணையத்தளங்களில் ஆவேசமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. சில இணையத்தளங்களில் அப்சல்குருவின் மரணத்தை தியாகத்துக்கு ஈடாக போற்றி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த இணையத்தள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீர் மாநில மக்களிடையே இந்த இணையத்தள தகவல்கள் வேகமாக பரவின. இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் ஒருவாரமாக இணையத்தள சேவையை மத்திய தொலைத்தொடர்புத்துறை நிறுத்தி வைத்திருந்தது. என்றாலும் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இணையத்தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று கருதப்படுவதால் அந்த இணையத்தள பக்கங்ககளை முடக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக தற்போது 73 இணையத்தள பக்கங்கள் தடுக்கப்பட்டன.

அதேபோல் ஃபேஸ்புக் சமூக வளைத்தளத்தில் கிட்டத்தட்ட 55 பக்கங்களில் அப்சல்குரு மரணத்தை விமர்சித்து தகவல்கள் வெளியாகி இருந்தன. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த 55 பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கருத்து சுதந்திர ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்!

English summary
The latest move of the Central government to block 55 Facebook pages that evidently valorise Afzal Guru and call for “avenging” his death is a manifestation of the cowardliness that has characterised the government’s every action, and its own lack of political conviction about hanging Guru.As this report notes, on the same day that the Department of Telecom issued a notice directing Internet Service Providers to block web pages with content relating to the Indian Institute of Planning and Management (IIPM), the government also issued notice to block 55 Facebook pages on Guru. That notice, the report adds, was not made public by the DoT.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X