சபாஷ்... காணாமல் போன அக்கா வீட்டுக்காரரின் காரைக் கண்டுபிடித்த ஷிண்டேவின் இளைய மகள்!

சுஷில் குமார் ஷிண்டேவின் மருமகன் ராஜ் ஷ்ராப். இவரது பஜேரோ கார் சமீபத்தில் காணாமல் போய் விட்டது. மத்திய உள்துறை அமைச்சரின் காருக்கே மும்பையில் பாதுகாப்பு இல்லை என்பது போல பேச்சுக்கள் கிளம்பி விட்டன.
இதையடுத்து போலீஸார் விசாரணையில் குதித்தனர். கொலை வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் குற்றப் பிரிவு போலீஸாரையும் விசாரணையில் இறக்கினர். ஏகப்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மறுபக்கம் ஷிண்டே குடும்பத்தாரும் கார் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். குறிப்பாக ஷிண்டேவின் இளைய மகளும், எம்.எல்.ஏவுமான பிரீனிதி ஷிண்டேவும் தனது அக்காள் கணவரின் கார் குறித்து விசாரித்து வந்தார்.
இந்த நிலையில், பந்த்ரா பகுதியில் ஒரு குடிசைப் பகுதிக்கு அருகே ராஜ் ஷ்ராப்பின் கார் பிரீனிதியின் உதவியால் மீட்கப்பட்டது.
சரி பிரீனிதி காரை எப்படிக் கண்டுபிடித்தார்...?
அதாவது பாலி ஹில் பகுதியிலிருந்து தனது காரில் ஒர்லி பகுதிக்குப் போய்க் கொண்டிருந்தாராம் பிரீனிதி. அப்போது சாலையில் தனக்கு முன்பா ஒரு பஜேரோ போவதைப் பார்த்தார். அது தனது அக்காள் கணவரின் கார் என்பதைக் கண்டுபிடித்தார். அவரது டிரைவர் மற்றும் பாடிகார்டும் அதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அந்தக் காலை பிரீனிதியின் டிரைவர் துரத்தினார்.
அதேசமயம், பிரீனிதி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். ஆனால் பஜேரோ கார் தப்பி விட்டது.
இருப்பினும் பந்த்ரா பகுதி முழுவதும் தீவிரமாக வேட்டை நடத்தியதில் குடிசைப் பகுதி அருகே கார் அனாதரவாக விடப்பட்டது தெரிய வந்து மீட்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications