For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு, விரைவில் மின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்தப்படவுள்ளன.

இது மட்டுமல்லாது மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதற்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இப்போது இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

54000 கோடி ரூபாய் நஷ்டத்தில்…

54000 கோடி ரூபாய் நஷ்டத்தில்…

தமிழக அரசு மின்வாரியம், 54,000 கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, வருவாயை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்து, முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.

அதிரடி திட்டங்கள் ரெடி

அதிரடி திட்டங்கள் ரெடி

புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது, மின்சார கணக்கீடு எடுப்பது, மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும் வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்துவது... இப்படியாக பல திட்டங்கள் கைவசம் உள்ளன.

கட்டண உயர்வு இப்படி இருக்கலாமோ?

கட்டண உயர்வு இப்படி இருக்கலாமோ?

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வைத்திருக்கும் உத்தேச கட்டண விபரம்தான் கதிகலங்க வைக்கிறது. இனி ஒரு முனை மின் இணைப்பு பெற ரூ.900 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (தற்போதைய கட்டணம், ரூ.250).

ரூ.500 லிருந்து ரூ.1600

ரூ.500 லிருந்து ரூ.1600

மும்முனை இணைப்புக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம் பெற இனி ரூ.10,000 கட்டவேண்டுமாம். இதற்கு தற்போது ரூ.3,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது: ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.500 (தற்போதைய கட்டணம், ரூ.150) மும்முனை மின் இணைப்புக்கு, ரூ.750 (தற்போதைய கட்டணம், ரூ.150)

மாதாந்திர வாடகை

மாதாந்திர வாடகை

வீட்டு மின் மீட்டர்களுக்கு, ரூ.10, மும்முனை மின் மீட்டர்களுக்கு, ரூ.40, வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, ரூ.50. மாதாந்திர வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீட்டர்களுக்கான டெபாசிட்

மீட்டர்களுக்கான டெபாசிட்

ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.825 (தற்போதைய கட்டணம், ரூ.700; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, ரூ.3,650 (தற்போதைய கட்டணம், ரூ.2,000.

ரீடிங் எடுத்தா கட்டணம்

ரீடிங் எடுத்தா கட்டணம்

மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும், ரூ.10 வசூலிக்கப்படும். குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, ரூ.100, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, ரூ.250. ரீடிங் குறிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை அட்டையின் விலை 10 ரூபாய்.

இனி சுவிட்ச் போட்டா கட்டணம் வசூலிக்கப்படும் என்பது மட்டும்தான் இல்லை. ஒருவேளை அதுக்கும் கட்டணம் வசூலித்தாலும் ஆச்சரியமில்லை.

English summary
TNEB has decided to charge all the services of the dept soon, sources say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X