For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு?

By Mathi
Google Oneindia Tamil News

Hyderabad blasts
ஹைதராபாத்: நாட்டை உலுக்கிய ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்கு ஹர்ஹத் உல் ஜிகாதி இஸ்லாமி என்ற ஹூஜி தீவிரவாத அமைப்புதான் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 முதல் 20 பேர் வரை பலியாகி இருக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதே ஹைதராபாத்தில் இதே மாதிரியான குண்டுவெடிப்பு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்த்தப்பட்டது. 2007-ம் ஆண்டு மெக்கா மஸ்ஜித் மசூதி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட நிலையில் அந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஆகஸ்ட் மாத இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஹூஜி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையோரே காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதேபோல் அந்த அமைப்பும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்றது. தற்போதும் அந்த அமைப்பின் நாசவேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நிலையிலேயே நாட்டில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறலாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த இருவரது தூக்குக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஹைதராபாத் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றே கருதப்படுகிறது.

English summary
A local module could have carried out the twin blasts in Hyderabad, said securities sources, adding that there could be external help involved in the attack. It was also learnt that the modus operandi in Thursday's blasts were similar to the twin blasts that had rocked two popular joints here in August 2007.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X