For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் தீவிரவாதி மகபூலுக்குத் தொடர்பா? போலீஸ் சந்தேகம்

By Mathi
Google Oneindia Tamil News

Hyderabad Blasts
ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு சம்பவத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தீவிரவாதி மகபூலுக்குத் தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஹைதராபாத்தில் குண்டு வெடித்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட வெடிகுண்டு துகள்களை போலீசார் சோதனை செய்தனர். கடந்த 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தை உலுக்கிய குண்டு வெடிப்பில் இதே ரக வெடிகுண்டுதான் பயன் படுத்தப்பட்டு இருந்தது.

இந்த ரக குண்டுகளை தயாரிப்பதில் இந்திய முஜாஹிதீன் அமைப்பின் சையத் மகபூல் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.. புனே குண்டுவெடிப்பு வழக்கில் தற்போது திஹார் சிறையில் இருக்கிற மகபூல்தான் தற்போதைய குண்டுவெடிப்பின் மூளையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையடுத்து மகபூலிடம் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் டெல்லி சென்று விசாரித்துள்ளனர். இதேபோல் ஆந்திர மாநிலம் வாரங்கலைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அஜன் கோரி மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மகபூலின் கூட்டாளிகளான இம்ரான், ஆசாத் மற்றும் இர்பான் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

English summary
Andhra Police has suspected that the four wanted accused who are still at large in Pune Blast case could be behind the attack in Hyderabad. While in Delhi, arrested Indian Mujahideen operatives were interrogated again in Tihar jail. Syed Maqbool, Imran, Asad and Irfan were quizzed for five hours by the Special Cell of the Delhi Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X