For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாலத்தீவு: நஷீத்தின் 11 நாள் ‘இந்திய தூதரக அடைக்கல’வாசம் முடிவுக்கு வந்தது!

By Mathi
Google Oneindia Tamil News

மாலத்தீவு: நஷீத்தின் 11 நாள் ‘இந்திய தூதரக அடைக்கல'வாசம் முடிவுக்கு வந்தது!

மாலே: மாலத்தீவு நாட்டில் இந்திய தூதரகத்தில் கடந்த 11 நாட்களாக அடைக்கலம் புகுந்திருந்த முன்னாள் அதிபர் நஷீத் இன்று வெளியே வந்தார்

நஷீத் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி மாலேயில் உள்ள இந்திய தூதரகத்தில் தமது ஆதரவு எம்.பிக்கள் 12 பேரும் அவர் அடைக்கலம் புகுந்தார். இதனால் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

மேலும் 20-ந் தேதிக்குள் நஷீத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால் மாலத்தீவு அரசு, இந்திய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் 11 நாட்களாக இந்திய தூதரகத்தில் தங்கியிருந்த நஷீத், இன்று தூதரகத்தை விட்டு வெளியேறினார். அவருடன் இருந்த எம்.பி.க்களும் வெளியேறினர். விசாரணைக்கு ஆஜராக நஷீத் ஒப்புதல் தெரிவித்ததாகவும் அவரது சுய விருப்பத்திலேயே அவர் வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது.

English summary
Former Maldives president Mohamed Nasheed left the Indian High Commission Saturday, 11 days after he sought refuge following an arrest warrant against him in a court case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X