For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதிரியார்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ள அனுமதி - மூத்த பிஷப் கோரிக்கை

By Shankar
Google Oneindia Tamil News

Keith-O-Brien
லண்டன்: கிறிஸ்தவ மத பாதிரியார்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை புதிய போப்பாக வருகிறவர் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து கர்டினல் கெய்த் ஓ பிரையன் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் ரோமன் கத்தோலிக்க மத பிரிவைச் சேர்ந்தவர்.

அடுத்த புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கர்டினல் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

இவர் ஸ்காட்லாந்து நாட்டில் வாழும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் தலைமை பிஷப் ஆக உள்ளார்.

'பிரம்மச்சாரிய வாழ்வை சில பாதிரியார்களால் சீராக கடைபிடிக்க முடியவில்லை. எனவே, விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா என்பது தொடர்பாக இயேசு கிறிஸ்து எதுவும் சொல்லவில்லை. எனவே இவ்விவகாரத்தில் பாதிரியார்கள் பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கக் கூடாது.

அதே போல கருக்கலைப்பு, கருணைக் கொலை போன்ற மதம் சார்ந்த கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக புதிதாக பொறுப்பேற்கவுள்ள போப் முடிவு செய்ய வேண்டும்.

விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,' என்று கெய்த் ஓ'பிரியன் கூறியுள்ளார்.

ஆனால் தற்போதுள்ள போப் ஆண்டவரான பதினாறாம் பெனடிக்ட், பாதிரியார்கள் திருமணம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்.

English summary
The most senior Roman Catholic clergyman in Britain has urged the next Pope to allow priests to marry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X