For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா பிறந்தநாளில் வருவாய்த் துறை அறிமுகப்படுத்தும் "அம்மா"

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பட்டா மாற்ற, இலவச வீட்டு மனை பட்டா பெற, உழவர் பாதுகாப்பு அட்டை பெற, பிறப்பு, இறப்பு, சாதிச் சான்றிதழ் பெற இனி நீங்கள் அலைய வேண்டாம் வருவாய்த் துறை அலுவலர்களே உங்கள் வீடு தேடி வந்து அளிப்பார்கள். அம்மா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

பட்டா மாற்ற, இலவச வீட்டு மனை பட்டா பெற, உழவர் பாதுகாப்பு அட்டை பெற, பிறப்பு, இறப்பு, சாதிச் சான்றிதழ் பெற மக்கள் நடையாக நடக்க வேண்டும். ஆனால் மக்கள் இனி அலைச்சல் இன்று சான்றிதழ்கள் பெற அம்மா (AMMA (Assured Maximum Service to Marginal People in All Villages) என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்தநாளையொட்டி இந்த புதிய திட்டத்தை இன்று துவங்குவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வின்னப்பள்ளி கிராமத்தில் இத்திட்டத்தை வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் இன்று துவங்கி வைத்தார்.

Jayalalitha
இந்த அம்மா திட்டத்தின்படி வருவாய்த் துறை அதிகாரிகள் வாரம் ஒரு நாள் குறிப்பிட்ட ஊராட்சியில் முகாமிடுவார்கள். அப்போது பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு, ஜாதி சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து உடனடியாக சான்றிதழ் வழங்க வழி செய்வார்கள்.

இது தவிர குடும்ப அட்டை, நிலப் பிரச்சனைகள், குடிநீர் பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்து உடனடி தீர்வு காணப்படும் என்று வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார்.

English summary
Tamil Nadu Revenue department has introduced a new scheme called 'AMMA' today ahead of CM Jayalalithaa's 65th birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X