For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் மகன் கொலை குறித்து விசாரிப்போம்.. சொல்கிறார் சென்னை சிறுவனைக் கொன்ற டக்ளஸ்

Google Oneindia Tamil News

Douglas Devanantha
கச்சத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இவரே சென்னையில் சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் சிக்கி தலைமறைவாகி இலங்கைக்கு ஓடியவர் என்பது குறிபபிடத்தக்கது.

கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்திருந்த டக்ளஸ் இதுகுறித்து அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. உண்மையென்றால் அது குறித்து விசாரணை செய்யப்படும்.

ஐ.நா.வின் மனித உரிமை மீறல் குறித்த பொதுவாக்கெடுப்பில் கடந்த முறை இந்தியா ஆதரிக்காது என்று கூறி எதிர்த்துவிட்டது. இந்த முறை எதிர்ப்பதாக கூறி வருகிறது. பொறுத்திருந்து பார்த்தால் இந்தியாவின்
முடிவு தெரியும்.

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையே நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் டக்ளஸ்.

English summary
Absconding 'accused' in a murder case in Chennai, Douglas Devanantha, a Lankan minister said that SL will investigate Balachandran killing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X