For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத் குண்டுவெடிப்பு எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

By Siva
Google Oneindia Tamil News

Madurai Meenakshi Amman temple
மதுரை: ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியதாக வந்த தகவலை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஹைதராபாத்தின் தில்சுக்நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் கிழக்கு கோபுர வாயில் மூடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்குள் யாரும் எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தவிர கோவில் வீதிகளில் வாகனங்கள் செல்லவும், நிறுத்தி வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
After the Hyderabad blasts, Madurai Meenakshi Amman temple has been provided 3 tier security. Security is beefed up there after the reports that Hyderabad blast suspects are hiding in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X