For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரி மகனுக்கு சொந்தமான தயா சைபர் பார்க் ஆக்கிரமிப்பு அகற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுக்கு சொந்தமான கட்டடம் நேற்று இடிக்கப்பட்டது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான தயா சைபர் பார்க் கட்டடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் முன் பகுதி மாநகராட்சிக்கு சொந்தமானது என்று ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

10 மாதங்களுக்கு முன்னால் இந்த கட்டத்தின் முன்னால் எச்சரிக்கை பலகை ஒன்றும் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த தயா சைபர் பார்க் கட்டடத்தின் முன்பகுதி சுவரை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

அதன் அருகே உள்ள மென்பொருள் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பகுதிகளும் இடிக்கப்பட்டன.

English summary
The Corporation officials on Tuesday retrieved 16.5 cents of government land, including 8 cents allegedly encroached by Union Minister M.K. Alagiri's family- owned Dhaya Cyber Park, near Mattuthavani Integrated bus stand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X