For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி: கடல் வழியே கடத்திய ஹெராயின் கடத்தியவர் கைது: ரூ. 10 கோடி ஹெராயின் பறிமுதல்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு கடல் வழியே தோணியில் ஹெராயின் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியிலிருந்து காய்கறிகள் ஏற்றிக் கொண்டு ஒரு தோணி மாலத்தீவுக்கு சென்றது. மாலத்தீவு சுங்கத்துறையினர் அவற்றை சோதனை செய்தனர். அப்போது தோணியில் கொண்டு செல்லப்பட்ட பேட்டரியால் இயங்கும் எடை பார்க்கும் இயந்திரத்திற்குள் 4 பாலீதீன் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதில் 3

பாக்கெட்டுகளில் மொத்தம் 2 கிலோ 105 கிராம் எடையுள்ள ஹெராயினும் 1 பாக்கெட்டில் 85 கிராம் எடையுள்ள மற்றொரு போதை பொருளும் இருந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து இவற்றை கடத்தியது தெரிய வந்தது.

தூத்துக்குடியை சேர்ந்த தோணி மாஸ்டரான பொன்னுசாமி என்பவரை இது தொடர்பாக கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தோணி உரிமையாளருக்கே தெரியாமல் போதை பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து கடத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எடை பார்க்கும் முகவரியில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு சென்று அங்கு கடை வைத்திருக்குகம் தூத்துக்குடியை சேர்ந்த ஜெயசந்திரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
2 kilograms of heroin, worth Rs. 10 crore in the international market, was on Tuesday seized and one person arrested in the connection, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X