For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டுக் கறி பர்கரில் கழுதை, எருமை கறிகள் கலப்படும்… ஆய்வில் அம்பலம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Burger
ஜோகன்னஸ்பெர்க்: பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பர்கர் உணவில் மாட்டுக்கறிக்குப் பதிலாக குதிரைக் கறி கலப்படம் செய்தது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் மாட்டுக்கறியை உள்ளடக்கிய பர்கர் போன்ற உணவுப்பொருள்களில் கழுதை மாமிசம் கலப்படம் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது குறித்து ஸ்டெலன்போஷ் பல்கலைகழக உணவுத்துறையின் மூன்று விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் 139 வகையான அசைவ உணவுப் பொருட்களை சோதனைக்கு உட்படுத்தினர்.

இதில் மாட்டுக்கறி உணவுகள் அவற்றை விற்பனை செய்யும் கடைகள் அதனுடன் சேர்த்து பரிமாறப்படும் சட்னிகள் என 28 சதவீத உணவுகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். பர்கர், உலர்ந்த கறிகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு என பலவும் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாட்டுக்கறி உணவுகளில் நீர் எருது, கழுதை ஆகியவற்றின் மாமிசமும் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில், மாட்டுக்கறியில் கலப்படம் செய்யப்படும் எருது மற்றும் கழுதை கறிகளால் உணவு துறை விதிகள் மீறப்படுவதோடு மத உணர்வுகள் ஆரோக்கியம் உள்ளிட்டவையும் பாதிக்கப்படுகிறது என்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் மாட்டுக்கறி பர்கரில் குதிரைக்கறியும், நெஸ்ட்லே பாஸ்தாவில் குதிரைக் கறி கலப்படம் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கழுதைக் கறி கலப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்மார்க்கெட், மால்களில் டின்னில் அடைத்து விற்பனை செய்யப்படும் மாமிச உணவுகளை வாங்கும் போது எச்சரிக்கை தேவை என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

நம் ஊரில் சிக்கன் என்று காக்கா கறியை போடுவதும், ஆடு, மாடு என்று நாய்கறிகளை போடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதை ஆய்வு செய்து உண்மையை நிரூபித்து நுகர்வோர்களின் உடல்நலத்தை காப்பார்களாக சுகாதாரத்துறையினர்.

English summary
Donkey, water buffalo and goat meat have been sold as burgers and sausages in South Africa, a study says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X