For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலச்சந்திரனை கொல்ல கோத்தபயாவுக்கு ஐடியா கொடுத்த கருணா: சேனல் 4 இயக்குனர் பேட்டி

By Siva
Google Oneindia Tamil News

Balachandran
லண்டன்: அம்மாவும், அக்காவும் எங்கே இருக்கிறார்கள் என்று விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனிடம் இலங்கை ராணுவம் விசாரித்ததாக சேனல் 4 தொலைக்காட்சி இயக்குனர் கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது நடந்த படுகொலைகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சேனல் 4 வெளியிட்டது. இந்நிலையில் அத்தொலைக்காட்சி அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டது.

இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான நோ பயர் ஜோன் வீடியோவை தயாரித்த சேனல் 4 தொலைக்காட்சி இயக்குனர் கெல்லம் மெக்ரே அளித்த பேட்டி வருமாறு,

கேள்வி: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களை எடுத்தது யார்?

பதில்: பாலச்சந்திரனின் புகைப்படங்கள் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டவை. அந்த வீடியோ 19-5-2009 அன்று எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவ படைகளிலேயே 53ம் பிரிவு படை தான் மிகவும் கொடூரமானது, கொஞ்சமும் இரக்கமில்லாதது. அந்த படை தான் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை எதிர்கொண்டது.

இவை எல்லாம் அந்த வீடியோக்களை எடுத்த 2 சிங்களப்படை வீரர்கள் கூறியது. அந்த 2 பேரும் 53ம் பிரிவு படையைச் சேர்ந்தவர்கள். போர் முடியும் வரை அங்கிருந்துவிட்டு அதன் பிறகு தப்பித்து வந்தவர்கள். அனைத்து வீடியோக்களையும் அவர்கள் தங்கள் செல்போனில் எடுத்தனர். போர் நடக்கும் இடத்தில் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க அனுமதி கிடையாது. இவை எல்லாம் ரகசியமாக எடுக்கப்பட்டவை.

இறுதிக் கட்டப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் ஒரு கிலோ மீட்டர் சதுர பரப்பளவு கொண்ட சிறிய பகுதி. அங்கு தான் மக்களை கொன்று குவித்து போரை முடித்துள்ளனர். 18-5-2009ம் அன்று போர் தீவிரமடைந்தபோது அங்கிருந்த மரங்களும், வாகனங்களும் ராணுவத்தால் கொளுத்தப்பட்டன. அப்போது பாலச்சந்திரன் தனது மெய்க்காப்பாளர் 4 பேருடன் இரவு முழுவதும் பதுங்கு குழியில் இருந்துள்ளார். மறுநாள் காலை வேறு வழியின்றி மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி பாலச்சந்திரன் 53ம் பிரிவு படையிடம் சரண் அடைந்தார்.

மே 19ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர் சரணடைந்தார். உடனே அவரை அவரது மெய்க்காப்பாளர்களிடம் இருந்து பிரித்துவிட்டனர். சரண் அடைந்தவர்களின் விவரத்தை அங்கு பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கோத்தபயா ராஜபக்சேவுக்கு தெரிவித்துள்ளார். அவர் இதை கருணாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு கருணா, அந்த பையனை உயிரோடு விட்டால் நமக்கு தான் பிரச்சனை. அவன் மைனர் என்பதால் சட்டப்படி அவனை தண்டிக்க முடியாது. அவன் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிட்டால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடுத்த தலைவராகக் கூட ஆகிவிடலாம். அதனால் பிறரைப் போன்று அவனையும் கொன்றுவிடலாம் என்று கோத்தபயாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இதையடுத்து 53ம் படைக்கு உத்தரவு கொடுக்கப்பட்டு அவர்கள் காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் அருகே துப்பாக்கியை வைத்து அவரை 5 முறை சுட்டனர். யாரைக் கொன்றாலும் அப்படையினர் தடம் தெரியாமல் எரித்துவிடுவார்கள். அதனால் பாலச்சந்திரனையும் தூக்கிச் சென்றனர். பாலச்சந்திரன் சரண் அடைந்தபோதும், சுட்டுக் கொல்லப்பட்ட போதும் எடுக்கப்பட்ட வீடியோக்கள் தான் தற்போது வெளியிடப்பட்டன.

கேள்வி: பாலச்சந்திரனிடம் ஏதாவது விசாரணை நடத்தப்பட்டதா?

பதில்: பாலச்சந்திரனிடம் அவரது அம்மா மற்றும் அக்கா இருக்குமிடம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர், தப்பிக்கும்போது அவர்கள் ஒரு குழுவாகும், நாங்கள் ஒரு குழுவாகவும் சென்றபோது அம்மாவை காணவில்லை. அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். இது தவிர அவரிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. துப்பாக்கியை அவர் அருகில் கொண்டு வந்தபோது கூட தன்னைத் தான் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று அவருக்கு புரியவில்லை.

கேள்வி: உங்களின் வீடியோ பொய் என்று இலங்கை அரசு கூறியுள்ளதே?

பதில்: செல்போனில் இருந்த வீடியோவை நான் பலமுறை பார்த்து அதன் உண்மை தன்மையை அறிந்த பிறகே ஆவணப்படம் எடுத்தோம். அந்த வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வு செய்தோம். அதில் இருப்பது அனைத்தும் உண்மை, உண்மை, உண்மை. இப்போது கூட இலங்கையில் உள்ள தமிழர்கள் உணவு, உடை, நீரின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இலங்கை அரசு உதவுவது இல்லை என்றார்.

English summary
Channel 4 director Callum Macrae told that his video is true and Balachandran was questioned about the whereabouts of his mother and sister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X