For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட்: வீட்டு கடன் வாங்குவோருக்கு வரி விலக்கு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சமாக உயர்வு

By Chakra
Google Oneindia Tamil News

Home Loan
டெல்லி: வீட்டு கடன் பெறுவோருக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

நிதிமைச்சர் ப. சிதம்பரம் 2013-2014ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார்.

அதில் அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு,

வங்கிகளிலும் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களிலும் வீட்டுக் கடன் பெறுவோருக்கு இனி கூடுதலாக ரூ.1 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும். முதன் முதலாக வீடு வாங்குபவர்களுக்கு தான் இந்த வரி விலக்கு பொறுந்தும்.

தற்போது வீட்டு கடன் வாங்குவோருக்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரூ.1.5 லட்சமாக உள்ளது. இனி புதிதாக வீட்டு கடன் பெறுவோருக்கு வரி விலக்கு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும்.

ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கே இந்தச் சலுகை பொறுந்தும்.

வீடுகள் கட்டப்படுவதை அதிகரிக்கவும், இதன்மூலம் இரும்பு-சிமெண்ட் தொழில் துறைகள் வளர்ச்சி அடையும் என்பதாலும், இதனால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதாலும் இந்தச் சலுகை அளிக்கப்படுவதாக சிதம்பரம் கூறினார்.

English summary
Finance minister P. Chidambaram presented the budget in the Lok Sabha on thursday. The FM has announced an additional deduction of Rs. 1 lakh on payment of interest (for self-occupied property) for homes below Rs. 25 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X