For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்கள், தங்கம், பணம் எங்கே?: ஜே.வி.பி.

By Mathi
Google Oneindia Tamil News

What happened LTTE's ships, Gold? JVP
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கப்பல்கள், பணம் மற்றும் தங்கம் பற்றிய நிலைமையை அறிவிக்கக் கோரி இலங்கையின் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஜேவிபி புகார் செய்திருக்கிறது. மேலும் இது தொடர்பாக கொழும்பு நகரில் சுவரொட்டிகளையும் ஒட்டி ஜேவிபி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக ஜே.வி.பி.யின் அமைப்புகளில் ஒன்றான ஊழலுக்கு எதிரான குரல் என்ற இயக்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கூறுகையில், தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றிய பின் இந்த பொருட்கள் மற்றும் பணம் என்பன சில அதிகாரமிக்க நபர்களினால் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த கப்பல்களுக்கும் தங்கத்துக்கும் என்ன நடந்தது என்பதை அரசு அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பல கப்பல்கள் உட்பட பலவும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டன என அரசாங்கமே ஒப்புக் கொண்டது. இவை அனைத்தும் இலங்கையின் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு சொல்வதில் உண்மை இல்லை என்றார் அவர்.

இந்த விவகாரத்தை முன்வைத்து கொழும்பு மோதரை பகுதியில் ஏராளமான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Srilanka government should first reveal to the what happened to the millions of money and stocks of gold that the govt. took from LTTE, asks the JVP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X