For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப.சி.இப்படி செய்வார்னு தெரிஞ்சிருந்தா திருவள்ளுவர் வேற வேலை செஞ்சிருப்பார்..:’ ட்விட்டர்’ கலாட்டா

By Mathi
Google Oneindia Tamil News

P Chidambaram
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிற போதும் திருக்குறளை மேற்கோள் காட்டுவது வழக்கம். இம்முறையும் அவர் திருக்குறளை மேற்கோள்காட்டியிருக்கிறார். இதற்காக ட்விட்டரில் ப.சிதம்பரத்தை கலாட்டா செய்து ட்விட்டுகளும் பதியப்பட்டிருக்கின்றன.

பார்லிமென்ட்டில் சிதம்பரம் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையின் முடிவில்

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்

என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கத்தை ஆங்கிலத்தில் விவரித்தார். அதாவது மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே அந்தக் குறளுக்கான பொருள் என்றார்.

இதேபோல் 2008-09ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது,

கொடை, அளி, செங்கோல், குடி-ஓம்பல், நான்கும்
உடையான் ஆம், வேந்தர்க்கு ஒளி

என்ற திருக்குறளையும் அதற்கு முன்பாக 2007-08ஆம் ஆண்டு

உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூம்
விட்டேமென் பார்க்கு நிலை

என்ற திருக்குறளையும் 2005-06ஆம் ஆண்டு

அறன் இழுக்காது, அல்லவை நீக்கி, மறன் இழுக்கா
மானம் உடையது-அரசு.

என்ற திருக்குறளையும் ப.சிதம்பரம் மேற்கோள்காட்டி இருந்தார்.

தற்பொழுதுதானே ட்விட்டர்,ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவுகள் இடப்படுகிறதே... இதில் ஒரு ட்விட்டர் பதிவருக்கு ப.சிதம்பரம் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை... "சிதம்பரம் மாதிரியான நபர்கள் மேற்கோள்காட்டுவார்கள் எனத் தெரிந்திருந்தால் நிச்சயமாக திருவள்ளுவர் திருக்குறளை எழுதாமல் வேற வேலையைப் பார்த்திருப்பார்" என கடுப்படித்திருக்கிறார்.

என்னா ஒரு வில்லத்தனம் பாருங்க!

English summary
P Chidambaram always ends his Budget speech by quoting from Thiruvalluvar which has a couplet for every subject ranging from ploughing a piece of land to ruling a country, and followed the tradition this year as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X