For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: 092121-98181க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு செல்போன் வழியாக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

092121-98181 என்ற எண்ணுக்கு இலங்கை மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை தேவை என்றால், "ஆம்' என்றும், தேவையில்லை என்றால் "இல்லை' என்றும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

எஸ்.எம்.எஸ் மூலம் கருத்தை தெரிவிப்போருக்கு வாக்கெடுப்பு குறித்த விவரங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸை ஆம்னெஸ்டி அமைப்பு அனுப்பி வைக்க இருக்கிறது.

இலங்கை மனித உரிமைகள் மீறல் தொடர்பாக இணையம் வழியாகவும் கருத்தை பதிவு செய்யலாம். இதற்காக http://act.amnesty.org.in/demand_justice_in_sri_lanka என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

மேலும் ஆம்னெஸ்டியுடன் சேர்ந்து இலங்கையில் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைக்கு பிரதமரை வலியுறுத்துங்கள்'; இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் கண்காணிக்க பிரதமர் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு ஆம்னெஸ்டியின் இயக்கத்தில் சேர 086880-01010 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்தை பதிவு செய்தால், பிரதமருக்கு அனுப்பப்படவுள்ள மனுவில் அவர்கள் கையெழுத்திடப்பட்டதாக கருதப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

English summary
Amnesty international campaign against Sri Lanka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X