For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாலச்சந்திரன் முகமூடி அணிந்து போராட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் சென்னையில் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பிப்ரவரி 28ம் தேதி மறைமலைநகரில் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் உருவம் பொறித்த முகமூடியை 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அணிந்து கொண்டு வந்தனர். இவர்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பங்கேற்றார். முகமூடி அணிந்த மாணவர்கள், இலங்கை அரசுக்கு எதிராகவும், அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.

Vaiko
போராட்டத்தின் போது வைகோ பேசியதாவது:

இலங்கையில் இறுதிக்கட்ட போரில் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை கைது செய்த இலங்கை இராணுவத்தினர், பாலசந்திரனின் கண் எதிரேயே பாதுகாப்புக்கு இருந்த 5 விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்றனர். பின்னர் பாலசந்திரனுக்கு சாப்பிடுவதற்கு பிஸ்கெட் தந்தனர். அதனை பால் வடியும் சிறுவன் பாலசந்திரன் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது போர் மரபை மீறி, இளம் சிறுவனை துப்பாக்கியால் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக்கொன்றனர்.

இதில் சிறுவனின் மார்பில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. இலங்கை கொடூரன் ராஜபக்ச ஒரு பாலசந்திரனை மட்டுமே சுட்டுக்கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர். இவர்களை அவன் என்ன செய்ய முடியும்?.

பாலசந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை சேனல்-4 வெட்ட வெளிச்சமாக காண்பித்த பிறகு இலங்கையின் கொடிய போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

இங்கு பாலசந்திரன் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வந்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

English summary
More than 350 schoolchildren were roped in to don masks of Balachandran, son of slain LTTE chief V Prabhakaran. Among them was Karthik, son of an MDMK union secretary, who wore a blue checked towel on a bare chest, with shorts and a packet of biscuits - the way Balachandran appeared in a photo released by a UK-based TV channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X