For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் செய்ததே மூன்றே மூன்று தப்புதான்... ராசா

Google Oneindia Tamil News

A Raja
வேலூர்: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பொறுத்தவரை நான் செய்தது மூன்றே மூன்று தவறு மட்டுமே என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராசா பேசுகையில், 2ஜி வழக்கில் நான் செய்தது 3 தவறு தான் என்று நீதிபதியிடம் வாதிட்டேன். செல்போன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது, செல்போன் கட்டணத்தை குறைத்தது, சராசரி தொலைபேசி கட்டணத்தை குறைத்தது. இதைத்தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை என்று நீதிபதியிடம் கூறினேன்.

நான் மத்திய அமைச்சராக இருந்த போது பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். மின்சாரமே இல்லாத கிராமங்கள் இன்றும் பீகார், ஒரிசா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ளன. ஆனால் 1971-ம் ஆண்டு 2-தடவையாக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி அடுத்த 5 ஆண்டுகளில மின்சாரமே இல்லாத கிராமம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு சென்றார்.

இதேபோல் 1989-ல் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அவர் வாழும்போதே தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை கொண்டு வந்து சாதனை செய்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்காக பாடுபடும் கட்சி திமுகதான். தற்போது டெசோ அமைப்பின் பிரதிதிநிதியாக மு.க. ஸ்டாலின் அனைத்து நாட்டு ஐ.நா.தூதுவர்களையும் சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கி வருகிறார். இலங்கையில் தமிழ் ஈழம் அமையும் என்றார் ராசா.

English summary
I committed only 3 mistakes in 2g issue, says former minister A Raja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X