For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க பொருளாதார மாநாட்டில் மோடி உரை ரத்துக்கு கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
பெங்களூர்: அமெரிக்காவில் நடைபெற இருக்கும் பொருளாதார மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றுவது ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூகவியலாளர் கிஷோர் திரிவேதி கருத்து தெரிவிக்கையில், பில்டெல்பியா மாநாட்டில் நரேந்திர மோடியின் உரை ரத்து செய்யப்பட்டது என்பது அறிவுத்துறை தலிபான்களின் செயலாகும். ஒரு மாநில முதல்வரை அழைத்துவிட்டு கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்வதை எல்லாம் மத்திய அரசு எப்படி அனுமதித்துக் கொண்டிருக்கிறது?

மோடியின் உரை ரத்து செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது இல்லை என்று கெளதம் அதானியும் சுரேஷ் பிரபுவும் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் மாண்டேக்சிங் அலுவாலியா, மிலிந்த் தியோரா ஆகியோர் எப்படித்தான் கலந்து கொள்கின்றனரோ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அண்மையில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது அதற்கு எதிர்ப்பாக போராட்டங்களை முன்னெடுத்தவர் ஆனி லூம்பா. இவர்தான் தற்போது பிலடெல்பியா பொருளாதார மாநாட்டில் மோடி உரையாற்றுவதற்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்.

இவர்களைப் போன்றவர்களுக்கு அப்சல் குரு தூக்கிலிடப்படுவது என்பது 'எதிர்பாராத ஒரு தூக்கு' தண்டனையாகத்தான் தெரியும். எதிர்பார்க்கின்ற 'தூக்கு' தண்டனை ஒன்றை இவர்கள் வைத்திருக்கின்றனரா எனத் தெரியவில்லை. இவர்களைப் போன்றவர்கள் பார்வையில் அஜ்மல் கசாப், அப்சல் குரு போன்றோர் மிகச் சிறிய அளவிலான குற்றம் இழைத்தவர்களாகத்தான் பார்க்கப்படுகின்றனர்.

குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவியை குஜராத் தேர்தல் களத்தில் நிறுத்திப் பார்த்தனர் லூம்பா போன்ற குஜராத் எதிர்ப்பு கோஷத்தை முன்வைப்போர். ஆனால் நடந்தது என்ன என்பது நாடு அறியும் என்றும் கிஷோர் திரிவேதி சுட்டிக்காட்டியுள்ளார்.

English summary
A different kind of terror attack hit India on the evening of 3rd March 2013! This was an attack different from the one we witnessed in Hyderabad a few days ago but it was an attack enough to shake the collective conscience of a billion Indians as well as the larger Indian community worldwide. The victims of this dastardly attack were intellectual freedom, freedom of speech as well as the sensibilities of the people of India!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X