For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க பொருளாதார மாநாட்டில் மோடியின் சிறப்புரை திடீர் ரத்து!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் பொருளாதார மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் சிறப்புரை ஆற்ற இருந்ததை அம்மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் திடீரென ரத்து செய்துவிட்டனர்.

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 17 -வது "Wharton India Economic Forum" என்ற பெயரில் பொருளாதார மாநாடு இம்மாதம் 22,23-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இந்திய பொருளாதர வளர்ச்சி குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி "வீடியோ கான்பரன்ஸ்" மூலம் சிறப்புரை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியின் சிறப்புரைக்கு கடும் எதிர்ப்பு உருவானது. இதனால் திடீரென மோடியின் சிறப்புரை ரத்து செய்யப்பட்டது.

இதில் மாண்டேக்சிங் அலுவாலியா, அமைச்சர் மிலிந்த் தியோரா உள்ளிட்டோர் உரையாற்ற இருக்கின்றனர். மோடியின் சிறப்புரை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது பற்றி பேசுவதும், விவாதிப்பதும் தான் இம்மாநாட்டின் முக்கிய நோக்கம். அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துக்களைப் பற்றி பேசுவதற்கோ அல்லது அவர்களது கொள்கை கோட்பாடுகளைப் பற்றி பேசுவதற்கோ அனுமதி இல்லை என்பதால் மோடியின் உரை ரத்து செய்யப்பட்டது என்றனர்.

English summary
Wharton India Economic Forum 2013 has been cancelled.Gujarat Chief Minister Modi's keynote address.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X