For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மது விலக்கு பிரச்சாரம்: கோவை மாவட்டத்தில் 3ம் கட்ட நடைபயணத்தை துவங்கும் வைகோ

Google Oneindia Tamil News

நெல்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தன்னுடைய மூன்றாம் கட்ட நடைபயணத்தை வரும் ஏப்ரல் 16ம் தேதி பொள்ளாச்சியில் துவங்குகிறார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இரண்டு கட்ட நடைபயணத்தை முடித்த அவர் தற்போது அடுத்த கட்ட நடைபயணத்திற்கு தயாராகி வருகிறார்.

நடைபயணத்தின்போது அவர் மக்களை சந்தித்து மதுவினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விளக்கம் அளிக்கிறார். அவரது நடைபயணத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

வைகோவை சந்தித்த ஜெயலலிதா

வைகோவை சந்தித்த ஜெயலலிதா

வைகோ கோவளத்தில் இருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டபோது சிறிதாவூருக்கு காரில் சென்ற முதல்வர் ஜெயலலிதா அவரை வழியில் பார்த்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி வந்து வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் 10 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது.

மூன்றாம் கட்ட நடைபயணம்

மூன்றாம் கட்ட நடைபயணம்

வைகோ பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மூன்றாம் கட்ட நடைபயணத்தை ஏப்ரல் 16ம் தேதி பொள்ளாச்சியில் துவங்குகிறார். இந்த நடைபயணம் ஈரோடு மாநகரில் நிறைவு பெறுகிறது.

கோவை மாவட்ட கல்லூரிகளில் பிரச்சாரம்

கோவை மாவட்ட கல்லூரிகளில் பிரச்சாரம்

இந்த உயரிய நோக்கத்தை மாணவர் சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் கோவை மாவட்ட இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் அம்மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய நகரங்களில் தலா ஒரு கல்லூரி என தேர்வு செய்து மாலை 3 மணி அளவில் துண்டறிக்கைகள் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இப்பிரச்சாரம் நாளை துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறும்.

பிரச்சாரம் செய்யப்படும் கல்லூரிகள் விவரம்:

பிரச்சாரம் செய்யப்படும் கல்லூரிகள் விவரம்:

மார்ச் 5 - ஈச்சனாரி புறவழிச்சாலை கற்பகம் கல்லூரி
மார்ச் 6 - கிணத்துக்கடவு ஈஸ்வர் பொறியியல் கல்லூரி
மார்ச் 7 - மகாலிங்கம் பொறியியல் கல்லூரி, மாக்கினாம்பட்டி
மார்ச் 8 - பி எ பொறியியல் கல்லூரி, புளியம்பட்டி
மார்ச் 11 - என் ஜி எம் கல்லூரி, பொள்ளாச்சி
மார்ச் 12 - ஸ்ரீ இராமு கலை அறிவியல் கல்லூரி, ஆனைமலை
மார்ச் 13 - சக்தி பொறியியல் கல்லூரி, சின்னியம்பாளையம்
மார்ச் 14 - கதிர் பொறியியல் கல்லூரி, நீலாம்பூர்
மார்ச் 15 - தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, கருமத்தம்பட்டி

மார்ச் 18ல் சூலூர்

மார்ச் 18ல் சூலூர்

மார்ச் 18 - ஆர் வி எஸ் கல்லூரி, சூலூர்
மார்ச் 19 - கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி, கண்ணம்பாளையம்
மார்ச் 20 - எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரி, வழியாம்பாளையம்
மார்ச் 21 - குமரகுரு பொறியியல் கல்லூரி, சரவணம்பட்டி
மார்ச் 22 - இராமகிருஷ்ணா கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம்
மார்ச் 25 - இரத்தினம் கல்லூரி, ஈச்சனாரி
மார்ச் 26 - கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, குனியமுத்தூர்

29ம் தேதி வால்பாறை

29ம் தேதி வால்பாறை

மார்ச் 27 - எஸ் என் ஆர் பொறியியல் கல்லூரி, காரமடை
மார்ச் 28 - நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரி, சிறுமுகை
மார்ச் 29 - அரசினர் கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை
ஏப்ரல் 1 - கலைமகள் கலை அறிவியல் கல்லூரி, நரசிபுரம்
ஏப்ரல் 2 - கம்பன் கலை அறிவியல் கல்லூரி, காமநாயக்கன்பாளையம்

இந்த பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட மாணவர் அணியினர் செய்து வருகின்றனர்.

English summary
MDMK chief Vaiko is going to start the 3rd phase of his padayatra against liquor consumption from Coimbatore district on april 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X