For Daily Alerts
Just In
அடகுவைத்த 500 பவுன் நகைகள் மோசடி: தம்பதி கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி 500 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் கண்ணன் கோவிலைச் சேர்ந்த குலாம் என்பவரும் அவரது மனைவி சீனியம்மாளும் சேர்ந்து, ராமநாதபுரம், புதுமடம், பெரியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கித் தருவதாகக் கூறி 500 சவரன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து கீழக்கரையைச் சேர்ந்த உமுல்கசியா என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகைகளை மோசடி செய்த தம்பதியைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.