For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயக் கடன் தள்ளுபடியில் ரூ. 10,000 கோடி ஊழல்: சிபிஐ விசாரிக்க வேண்டும்-பாஜக

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் ரூ. 52,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ. 10,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இந்தத் திட்டத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறுகையில்,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழலை தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மற்றொரு ஊழல் இப்போது அம்பலமாகி இருக்கிறது.

விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடு நடந்து இருப்பதை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

ரூ.52,000 கோடி கடன் தள்ளுபடியில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்து இருக்கிறது. தகுதியுடைய 34 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் தகுதியற்ற 24 லட்சம் பேர் கடன் தள்ளுபடி சலுகை பெற்று பெரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளனர்.

இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே, ஒருசார்புடையதாக இருந்தது. குறிப்பாக கடன் பெற்ற விவசாயிகள் ஒருமுறை தவணைத் தொகையை செலுத்தியிருந்தாலும், அவர்களுக்கு தள்ளுபடி வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. அதனால்தான் ரூ. 52 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டபோதிலும், உண்மையான, தகுதியுள்ள விவசாயிகள் பலர் கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிக தொகையும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைவான தொகையும் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. இதுபோன்று பாரபட்சமாக செயல்படுவதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உண்மையான முகமாகும்.

இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்; தேர்தல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில் ஊழல் நடந்து இருப்பது இப்போது தெரிய வந்து உள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆதாயத்துக்காக அரசாங்க பணம் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

English summary
The BJP on Tuesday alleged that a fresh scam of over Rs 10,000 crore had surfaced in the implementation of the farm loan waiver scheme and demanded a CBI probe to book the culprits. "The CAG report is an eye opener and the BJP demands immediate CBI inquiry to unearth the real extent of the scam," party spokesperson Prakash Javadekar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X