For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாஹூ கிடக்கு: இந்தியாவில் வீட்டில் இருந்து வேலை பார்க்கத் தான் செய்வார்கள்!

By Siva
Google Oneindia Tamil News

Yahoo Logo
டெல்லி: யாஹூ போன்ற நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யக் கூடாது என்று தங்கள் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளபோதிலும் இந்தியாவில் அந்த வசதி இருக்கத் தான் செய்யும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் யாஹூவின் முடிவு நல்லதா கெட்டதா என்று பலர் விவாதித்து வருகின்றனர்.

தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கையில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று தான் பணியாற்ற வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்ற நிலையாகிவிட்டது. ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் யாஹூ நிறுவன சிஇஓ மரிசா மேயர் ஊழியர்கள் யாரும் வீட்டில் இருந்து வேலை பார்க்கக் கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். என்ன தான் யாஹூ போன்ற நிறுவனங்கள் இவ்வாறு உத்தரவிட்டாலும் இந்தியாவில் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதி தொடரத்தான் செய்யும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

யாஹூவின் முடிவு போன்றவற்றின் எதிரொலி பிற நிறுவனங்களில் இருக்கக் கூடாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The trend of employees working from home is here to stay in India despite companies like Yahoo! banning the practice, experts have said. The decision by new Yahoo CEO Marissa Mayer to ban work from home plans has set off a debate as to whether this was a wrong decision or a necessary evil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X