For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். பிரதமர் வருகைக்கு அஜ்மீர் தர்கா நிர்வாகம் கடும் எதிர்ப்பு- நிபந்தனை விதிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

Ajmer Dargah’s spiritual head opposes Pak PM’s visit
அஜ்மீர்: நபிகளின் போதனைகளையும் குரானையும் பின்பற்றாத பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இந்தியாவின் அஜ்மீர் தர்காவுக்கு வருகை தரக் கூடாது என்று அதன் தலைமை நிர்வாகியான ஜைனுல் அபிதீன் அலி கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் அஜ்மீர் தர்காவில் நாளை வழிபாடு நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கு தர்கா நிர்வாகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தர்காவின் தலைமை நிர்வாகியான ஜைனுல் அபிதீன் அலி கான் கூறுகையில், மனிதாபிமானமற்ற வகையில் இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்திருக்கின்றனர். அத்துடன் இந்திய வீரர் ஹேம்ராஜின் தலையையும் எடுத்து சென்றிருக்கின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் அஜ்மீருக்கு வருவதற்கு முன்பாக எடுத்துச் செல்லப்பட்ட இந்திய வீரரின் தலையை ஒப்படைக்க வேண்டும். இந்த கொடுஞ்செயலுக்காக பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமரின் இந்திய வருகையை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. அதே நேரத்தில் அவர் அஜ்மீர் தர்காவுக்கு வருகை தந்தால் அவரை முன்னின்று நான் வரவேற்க மாட்டேன் என்றார் அவர்.

English summary
Taking a stern view against Pakistani establishment’s machinations against India, the spiritual head of Khawaja Moinuddin Chisti's shrine on Friday opposed the forthcoming visit by Pakistani Prime Minister Raja Pervez Ashraf to the world famous Sufi shrine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X