For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வாய்ப்புகள் இருக்கிறது: குலாம்நபி ஆசாத்

By Mathi
Google Oneindia Tamil News

Ghulam Nabi Azad
டெல்லி: ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் பேசிய குலாம் நபி ஆசாத், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. அப்போதைய வழிகாட்டுதல்களின் படி தற்போதும் அமெரிக்கா தீர்மானம் மீது இந்தியா முடிவெடுக்கும்.

இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை, பாலியல் பலாத்கார சம்பவங்களை, பிரபாகரனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டது பற்றி உண்மையைக் கண்டறிய வேண்டிய கடமை இலங்கைக்கு இருக்கிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன என்றார் அவர்.

English summary
At a meeting organised by the Tamil Eelam Supporters Organisation (TESO) in New Delhi on Thursday, All India Congress Committee general secretary Ghulam Nabi Azad said the government’s decision on a draft resolution in the United Nations Human Rights Council in Geneva would be guided by India’s decision to support the resolution against Sri Lanka in March 2012. Mr. Azad, who is in-charge of party affairs in Tamil Nadu, said Sri Lanka had “a moral duty to find the truth about the inhuman acts of oppression, sexual assaults and torture of helpless persons, including the family of LTTE leader Prabakaran.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X