For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் தினம்: முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டு 8 விமானங்களை இயக்கிய ஸ்பைஸ்ஜெட்!

By Chakra
Google Oneindia Tamil News

SpiceJet operates all-women flights on Women's Day
மும்பை: பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று காலை முக்கிய நகரங்களில் இருந்து முதல் விமானங்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய 8 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் இயக்கியது.

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து 5 போயிங் 737 விமானங்களும், 3 பம்பார்டியர் க்யூ 400 ரக விமானங்களையும் முழுக்க முழுக்க பெண் பைலட்டுகளே இயக்கினர்.

காலை 5 மணி முதல் இந்த விமானங்கள் பறக்கத் தொடங்கின.

இந்த விமானங்களில் இருந்த பைலட், கோ பைலட், பணிப் பெண்கள் அனைவரும் பெண்களே. அதே போல ஸ்பைஸ்ஜெட்டின் கவுண்டர்களிலும் இன்று காலை பெண்களே முதலில் பணியை ஆரம்பித்தனர்.

செக் இன் கவுன்டர்கள், விமான என்ஜினியர்கள், பாதுகாப்புப் பிரிவு என அனைத்துப் பிரிவுகளையும் பெண்களே கையாண்டனர்.

போயிங் விமானங்களை 8 பெண் பைலட்கள், 27 பெண் கோ பைலட்களும், பம்பார்டியர் ரக விமானங்கள் 3 பெண் பைலட்கள், 10 கோ பைலட்களும் இயக்கினர்.

அதே போல இன்று விமானத்தில் பயணித்த பெண் பயணிகள் அனைவருக்கும் ரோஜாக்களை வழங்கியது ஸ்பைஸ்ஜெட்.

English summary
International Women's Day got off to a flying start Friday with private carrier SpiceJet's first flights of the day being operated by all-women crew, an official in Mumbai said. The all-women operations included pilots, co-pilots, in-flight crew, staff at check-in counters,engineers and security, a company spokesperson said. It began from around 5am onwards with SpiceJet's Boeing B-737 fleet taking off from Mumbai, New Delhi, Kolkata, Chennai and Bengaluru; its Bombardier Q-400 fleet of aircrafts took to the skies from New Delhi, Hyderabad and Chennai. Lending a personal touch to the celebrations, the airline staff gifted pink roses to women travellers on all the flights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X