For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு- இயல்பு நிலை திரும்பியது

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று காலை முதல் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கக் கோரி ஜம்மு காஷ்ம்ரீல் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்தப் போராட்டத்தின் போது பாரமுல்லா மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது. இதில் சுமார் 200 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இதனால் பாரமுல்லா மாவட்டத்தில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு இயல்பு நிலை திரும்பியிருக்கிறது

English summary
Normal life today resumed in Kashmir after five days of shutdown, curfew in some parts of the Valley, and clashes that left nearly 200 people injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X