For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலகாபாத் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு- லட்சக்கணக்கானோர் புனித நீராடல்

By Mathi
Google Oneindia Tamil News

அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 55 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளா மகா சிவராத்திரி நாளான இன்றுடன் நிறைவடைகிறது.

அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த மகா கும்பமேளா காலத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதி சங்கமிக்கும் திரிணாவேணி சங்கமத்தில் பெளர்ணமி மற்றும் அமாவாசை போன்ற புனித நாட்களில் பல கோடிப் பேர் புனித நீராடினர். நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான சாதுக்களும் புனித நீராடினர்.

இன்று மகா சிவராத்திரி நாள், புனித நாள் என்பதால் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். அண்மையில் அலகாபாத் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

Kumbh mel
English summary
Marking the last day and Snan of 55-day-long Kumbh Mela, about 50 lakh devotees are expected to take the holy dip on the occasion of Mahashivaratri on Sunday. Mahashivaratri Snan marks the end of the Maha Kumbh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X