For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு செல்வது இனி கஷ்டம்!

By Chakra
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: குறைந்த ஊதியம் கொண்ட பணிகளுக்காக இனி வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியாது.

ஆண்டுக்கு 180,000 டாலர் முதல் 250,000 டாலர் வரை ஊதியம் வழங்கப்பட்டால் மட்டுமே வெளிநாட்டினரை வேலைக்குச் சேர்க்கலாம் என்று ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு அந் நாடு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டினரை மிகக் குறைந்த ஊதியத்தில் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா பெரும் தடையை உருவாக்கியுள்ளது. குறைந்த ஊதியமானாலும் பரவாயில்லை, ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்டால் போதும் என்ற நிலையில் உள்ள வெளிநாட்டினருக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது தொடர்பாக விசா விதிமுறைகளில் பல்வேறு புதிய விதிகளை ஆஸ்திரேலியா சேர்த்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது வெளிநாட்டுத் தொழிலாளர்களே.

மேலும் வெளிநாட்டினரை வேலைக்குச் சேர்க்கும்போது அவர்களுக்கு ஆங்கிலம் போதிக்க வேண்டும், ஆஸ்திரேலியர்கள் கிடைக்காத பட்சத்தில் தான் இவர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்றும் இந்த புதிய விசா விதிகள் கூறுகின்றன.

English summary
Thousand of low-paid foreign workers will be stopped from coming into Australia and finding employment, under the federal government's crackdown on visas. Under the new law which is to be announced by Immigration Minister Brendan O''Connor, employers will have to pay from the former market rate of 180,000 dollars to 250,000 dollars so as to close loopholes which allow a foreign worker to be paid less than an Australian citizen, the Courier Mail reports. The new law will also raise requirements for foreign workers to speak English, restrict them from being hired in regions having skill shortages, and will demand that employers offer proper training for local residents to fill skill shortages before employing foreigners, the report added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X