For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிறைவடைந்தது மகா கும்பமேளா.. கடைசி நாளில் புனித நீராடிய பூனம் பாண்டே

Google Oneindia Tamil News

அலகாபாத்: பல லட்சம் பேர் வந்து புனித நீராடிய, உலகின் மிகப் பெரிய மத விழாக்களில் ஒன்றான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று வரை 8 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக கணக்குகள் தெரிவிக்கின்றன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா கும்பமேளா நடைபெறும். இந்த ஆண்டு நடந்த மகாகும்பமேளா ஜனவரி 14ம் தேதி மகா சங்கராந்தியன்று தொடங்கியது. 55 நாட்கள் நடைபெற்றது.

நேற்றுடன் இந்த மகா கும்பமேளா முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று மட்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் புனித நீராடினர்.

கங்கா- யமுனா - சரஸ்வதி

கங்கா- யமுனா - சரஸ்வதி

புனித ஆறுகள் என வர்ணிக்கப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் இடம்தான் திரிவேணி சங்கமம். இந்த இடத்தில்தான் கும்பமேளா நடைபெறுவது வழக்கம்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா கும்பமேளா நடைபெறும். இந்த சமயத்தில் உலகெங்குமிருந்து கோடிக்கணக்கானோர் திரண்டு வந்து இங்கு புனித நீராடி தங்களது பாவங்களைத் தீர்ப்பார்கள்.

தினசரி லட்சக்கணக்கானோர்

தினசரி லட்சக்கணக்கானோர்

மகா கும்பமேளாவின்போது தினசரி லட்சக்கணக்கானோர் புனித நீராடுவதுதான் இந்த விழாவின் முக்கிய அம்சம். பெரும்பாலும் சாதுக்கள், துறவிகள், சாமியார்கள், மடாதிபதிகள்தான் அதிகம் வருவார்கள்.

விதம் விதமான சாமியார்கள்

விதம் விதமான சாமியார்கள்

மகா கும்பமேளாவிற்கு விதம் விதமான சாமியார்கள் வந்து குவிந்ததை பலரும் வியப்புடன் பார்த்தனர். இப்படிப்பட்ட சாமியார்கள் எல்லாம் இருக்கிறார்களா என்ற ஆச்சரியமும் மக்களுக்கு ஏற்பட்டது.

நிர்வாண சாமியார்கள்

நிர்வாண சாமியார்கள்

நாகா சாமியார்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள்தான் இந்த விழாவின் முக்கிய ஹைலைட்டே. இவர்கள்தான் வழக்கம் போல இந்த மகா கும்பமேளாவின்போதும் அனைவரையும் கவர்ந்தனர்.

மவுனி அமாவாசை

மவுனி அமாவாசை

கடந்த 10ம் தேதி மவுனி அமாவாசை தினத்தன்று கிட்டத்தட்ட 3 கோடி பேர் புனித நீராடினர்.

நித்தியானந்தாவும் நீராடினார்

நித்தியானந்தாவும் நீராடினார்

இந்த முறை மகா கும்பமேளாவின்போது சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தா தனது ஆதரவாளர் புடை சூழ வருகை தந்து நீராடினார். நான் கடவுள் பட பாட்டுடன் ஊர்வலமாக சென்று அவர் நீராடியதை பலரும் வியப்புடன் பார்த்தனர்.

ஜெயேந்திரரையும் சந்தித்த நித்தியானந்தா

ஜெயேந்திரரையும் சந்தித்த நித்தியானந்தா

அதேபோல தன்னை ஒரு கட்டத்தில் கடுமையாக விமர்சித்த ஜெயேந்திரரையும் சந்தித்துப் பேசி மகிழ்ந்தார் நித்தியானந்தா.

நேற்று மட்டும் 30 லட்சம் பேர்

நேற்று மட்டும் 30 லட்சம் பேர்

கடைசி நாளான நேற்று மகா சிவராத்திரி என்பதால் பெரும் விசேஷத்துடன் கும்பமேளா நிறைவடைந்தது. நேற்று மட்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் புனித நீராடினராம்.

பூனம் பாண்டேவும் புனித நீராடினார்

பூனம் பாண்டேவும் புனித நீராடினார்

தனது கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக கொண்டு பிரபலமடைந்த மாடல் அழகி பூனம் பாண்டேவும் நேற்று புனித நீராடி அனைவரையும் கவர்ந்தார்.

பாவம் தீர்க்க வரவில்லையாம்

பாவம் தீர்க்க வரவில்லையாம்

திரிவேணி சங்கமத்தில் முழுக்குப் போட்டால் பாவம் தீரும் என்பது ஐதீகம். ஆனால் பூனம் அதற்காக வரவில்லையாம். மாறாக தான் பாலிவுட்டில் முதல் முறையாக நடிக்கும் நாஷா படம் வெற்றிகரமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு புனித நீராடினாராம்.

நாகா சாதுவுடன் ஒரு போஸ்

நாகா சாதுவுடன் ஒரு போஸ்

புனித நீராடிய பூனம் பாண்டே, நாகா சாது ஒருவருடன் உட்கார்ந்து போட்டோ எடுத்து அதையும் டிவிட்டரில் போட்டுள்ளார்.

கஞ்சாவையும் புகைத்தாராம்

கஞ்சாவையும் புகைத்தாராம்

மேலும் நாகா சாது வைத்திதருந்த கஞ்சாவையும் வாங்கி சுவைத்துப் பார்த்தாராம். கேட்டால் அது சாது கொடுத்த பிரசாதம் என்கிறார்.

புல் பவர் கிடைச்சுதாம்...

புல் பவர் கிடைச்சுதாம்...

கஞ்சா குறித்து அவர் கூறுகையில், எனக்கு புல் பவர் கிடைத்தது போல உணர்ந்தேன். ஜெய் போலே நாத், ஜெய் சிவ சம்போ என்று கூறியுள்ளார் பூனம்.

English summary
The Kumbh Mela, probably the largest religious gathering on Earth wraps up Sunday in Allahabad. It will take about 10 days to collapse the tented-city built on the Ganges riverbed, where up to 80 million pilgrims have come to bathe over the past two months, according to the organizers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X