For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓங்கி அறைந்ததில் மனைவி மரணம்: பெங்களூர் விஞ்ஞானி கைது

Google Oneindia Tamil News

Murder
பெங்களூர்: பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்து வருபவர் 38 வயதான தர்மேஷ் குமார். அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மகாலட்சுமியுடன் வசித்து வந்தார். மகாலட்சுமி வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான்.

கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 10.30 மணியளவில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது தர்மேஷின் சகோதரி அவரை தொலைபேசியில் அழைத்து மறுநாள் தான் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். இதற்கு மகாலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

கடும் கோபம் அடைந்த தர்மேஷ் மகாலட்சுமியை ஓங்கி அறைந்துள்ளார். அறை வாங்கிய மாத்திரத்தில் மகாலட்சுமி சோபாவில் நிலைகுலைந்து விழுந்துள்ளார். பதறிப்போன தர்மேஷ், மகாலட்சுமியை எழுப்ப முயற்சித்துள்ளார். வாயோடு வாய் வைத்து தனது மூச்சு காற்றை கொடுத்து பார்த்துள்ளார். அதுவும் பயனளிக்கவில்லை என்ற உடன் அருகில் இருந்த செயின்ட் ஜான் மருத்துவமனைக்கு அவரை தூக்கிச் சென்றுள்ளார்.

மகாலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவெ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மடிவாளா போலீஸார் தர்மேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தர்மேஷ் தனது மனைவியை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்ற போதிலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 302ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மரணத்திற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகே கூற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மகாலட்சுமியின் உடல் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கணவன் மனைவிக்கிடையே ஏற்கனவே ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று மகாலட்சுமியின் பெற்றோரிடம் போலீஸார் கேட்ட போது, அப்படி எதும் இல்லை என்று கூறியுள்ளனார்.

தர்மேஷ் மகாலட்சுமி இருவரும் மும்பையில் கடந்த 2005ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தர்மேஷ், பாபா அணு ஆய்வு மையத்தில் உதவி விஞ்ஞானியாக பணிபுரந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தர்மேஷ் மகாலட்சுமி ஜோடி பெங்களூருக்கு வந்தனர்.

காவல் நிலையத்தில் சம்பவம் பற்றி கூறிய தர்மேஷின் நண்பர் ஒருவர், இது தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், வீட்டில் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்னை என்று தர்மேஷ் ஒரு நாள் கூட கூறியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

English summary
A researcher with a multi-national company allegedly slapped his wife with fatal consequences at their apartment in the city late Sunday night. Dharmesh Kumar, 38, an exploratory gas researcher with Shell Global Solutions, was arrested on charges of murder. He allegedly slapped his wife, Mahalakshmi, 37, a teacher at Elements Montessori on Aralur Road, at their Mantri Flora apartment in a fit of rage. An unconscious Mahalakshmi was rushed to St John's Medical College Hospital, where she was declared dead on arrival. Alerted by hospital authorities, police rushed took Dharmesh into custody.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X