For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெசோ பந்த்: புதுவையில் ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு, பேருந்தை மறிக்க முயன்ற 100 திமுகவினர் கைது

By Siva
Google Oneindia Tamil News

Rajapakse
புதுவை: டெசோ பந்தை முன்னிட்டு புதுவையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் டெசோ சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இன்று பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கடைகளும் திறந்திருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் புதுவையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை திமுகவினர் எரித்தனர். மேலும் பேருந்தையும் மறிக்க முயன்றனர். இதையடுத்து 100 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று தமிழகத்திலும் பேருந்து, ரயிலை மறிக்க முயன்ற நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Puducherry police arrested 100 DMK men who burnt Sri Lankan president Rajapakse's effigy and tried to stop the buses ahead of TESO bandh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X