For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெசோ பந்த்: ரயில், பேருந்தை மறிக்க முயன்ற நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

By Siva
Google Oneindia Tamil News

TESO bandh: DMK men arrested
சென்னை: டெசோ வேலைநிறுத்தத்தையொட்டி ரயில் மற்றும் பேருந்துகளை மறிக்க முயன்ற திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

ஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் இன்று தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கடற்கரை செல்லும் ரயிலை மறிக்க முயன்ற திமுகவினர் 100 பேர் செய்யப்பட்டனர். மேலும் காஞ்சீபுரம் அருகே வாலாஜாபாத்தில் ரயிலை மறிக்க முயன்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர். சென்னை தாம்பரத்தில் கடைகளை அடைக்க முயன்ற 25 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டையில் சாலை மறியல் செய்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 50 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் மறியல் செய்த திமுகவினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

English summary
Police have arrested hundreds of DMK men who tried to stop the trains and buses and compelled the merchants to close their shops ahead of TESO bandh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X