For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோட்டில் 'டெசோ' சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது

By Mathi
Google Oneindia Tamil News

Subbulakshmi Jagadeesan
ஈரோடு: டெசோ முழு அடைப்பு போராட்டத்தின் ஒருபகுதியாக ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட அதன் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் கைது செய்யப்பட்டார்.

ஈரோட்டில் இன்று திமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல் செய்தனர். மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை-நாகை-திருவாரூர்

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பெரு, சிறு நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் உணர்வுபூர்வமாக தாமாகவே முன்வந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு சென்ற பிறகு தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 27 இடங்களில் சாலை மறியல் செய்து கைதாகினர். ஒவ்வொரு இடங்களிலும் கைதானப் பிறகு வழக்கம்போல் போக்குவரத்து சீரானது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் வர்த்தக சங்கத்தினர் ஏற்கனவே எடுத்த முடிவின்படி டீக்கடை உட்பட அனைத்து கடைகளும் அடைத்திருந்தனர்.

English summary
TESO member Subbulakshmi Jagadeesan arrested during a protest at Erode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X