For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஆர்டிஓ கம்ப்யூட்டர்களை ஹேக் செய்த சீனர்கள்?: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

By Siva
Google Oneindia Tamil News

DRDO computers 'hacked', probe underway
டெல்லி: அதிமுக்கியமான தகவல்கள் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்யும் டிஆர்டிஓ அமைப்பின் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சீனர்கள் தான் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் அதிமுக்கியமான தகவல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து எடுத்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆனால் இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் கேட்டதற்கு, இந்த விவகாரம் குறித்து உளவுத்துறை ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வருகின்றன. அதனால் தற்போது நான் எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி டிஆர்டிஓ கம்ப்யூட்டர்களில் இருந்து எந்த தகவலும் எடுக்கப்படவில்லை என்று டிஆர்டிஓ செய்தித் தொடர்பாளர் ரவி குப்தா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டிஆர்டிஓ கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. ராணுவ தளவாடங்கள் குறித்த முக்கியமான தகவல்கள் விஷமிகள் கையில் கிடைத்துவிடாமல் இருக்க பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The computers of highly-sensitive Defence Research and Development Organisation (DRDO) have reportedly been hacked. The hacking is suspected to have been carried out by Chinese hackers and there are fears that some sensitive information could have been compromised.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X